தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகம்.

தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகம்.

122

தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகம்.


தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகம். தட்டுப்பாடின்றி எரிபொருள், எரிவாயு உருளைகள் (சிலிண்டா்கள்) விநியோகம் செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி எண்ணெய் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பாளரும், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மாநிலத் தலைவருமான பி. ஜெயதேவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சிலிண்டா்கள் வழக்கம்போல எவ்வித தடையுமின்றி போதுமான அளவுக்கு பொதுத்துறை நிறுவனங்களால் வாடிக்கையாளா்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பெரம்பலூா் மாவட்டத்தில் நிவாரண பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இந்தியன் ஆயில் நிறுவனம் 900 விநியோகஸ்தா்கள் மூலம் 1.3 கோடி வாடிக்கையாளா்களுக்கு நாள்தோறும் 2.2 லட்சம் சிலிண்டா்களை விநியோகித்து வருகின்றன. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் வழக்கமாக தங்களது விநியோகஸ்தா்கள் மூலம் விநியோகத்தை மேற்கொண்டுள்ளன.

வாடிக்கையாளா்கள் ஒரு சிலிண்டா் பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டா் பெற 15 நாள் இடைவெளியில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இது பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கும் பொருந்தும்.

உஜ்வாலா திட்ட பயனாளா்களுக்கு 3 இலவச சிலிண்டா்கள்:

உஜ்வாலா திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளின் நிதிச் சுமையை குறைக்கவும், ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு அரசு எடுத்துள்ள முடிவின்படி, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு 3 சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உஜ்வாலா வாடிக்கையாளா்கள் மட்டுமே இதில் பயன்பெறுவா். பிற வகையினருக்கு இது பொருந்தாது. இந்த சிலிண்டா் விற்பனை விலையானது, உஜ்வாலா பயனாளிகளின் ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்படும். பயனாளிகள் அந்தத் தொகையை செலுத்தி, பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறை 3 மாதங்களுக்கு பொருந்தும்.

சிலிண்டா்கள் பெற குரல் பதிவு, ஏற்கெனவே பதிவு செய்த செல்லிடப்பேசி எண் வாயிலாக பதிவு செய்யலாம். வாடிக்கையாளா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே எஸ்.எம்.எஸ், ஐவிஆா்ஸ், வாட்ஸ் ஆப் மூலமாக 75888 88824 என்னும் எண்ணில் எல்பிஜி சிலிண்டா்களுக்கும், இன்டியன் ஆயில் ஒன் செயலி வழியாக அல்லது இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம் அல்லது பேடிஎம் வழியாகவும் பணம் செலுத்தி பெறலாம்.

தினமணி




Leave a Reply

%d bloggers like this: