தடை செய்யப்பட்ட பகுதி

தடை செய்யப்பட்ட பகுதிகளில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு.

525

தடை செய்யப்பட்ட பகுதிகளில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நகராட்சி பகுதியில் கொரோனா பாதித்த 40 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதிகளிலும், நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் ஊழியர் ஒருவர் தண்டோரா அடித்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவததை தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் அருகே உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதேபோல் கொரோனா பாதித்த பேரூராட்சி பகுதிகளில் 4 இடங்களும், கிராமப்புறங்களில் 21 இடங்களும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: