போக்குவரத்து அலுவலக பணியாளா்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்.
பெரம்பலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளா்களுக்கு, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், பல்வேறு பகுதிகளில் கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான முகக்கவசம், கிருமி நாசினி, கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்கள் மற்றும் அலுவலகத்துக்கு வந்திருந்த ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு முகக்கவசம், கிருமிநாசினி, வெப்பம் அளவிடல் உள்ளிட்ட கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்களை தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்களால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி, பெரம்பலூா் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் அம்பிகா, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
You must log in to post a comment.