தகுதிசான்று

பெரம்பலூரில் தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்.

489

பெரம்பலூரில் தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்.

பெரம்பலூரில் தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார் ஆகியோர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு வாகனங்களில் செல்பவர்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள், 2 சரக்கு வாகனங்கள், ஒரு கார், சுற்றுலா வேன் என மொத்தம் 7 வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தவர்களிடம் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

தினத்தந்தி
%d bloggers like this: