டேங்கா் லாரி மோதிய விபத்தில்

பெரம்பலூா் அருகே டேங்கா் லாரி மோதிய விபத்தில் இளைஞா் பலி.

907

பெரம்பலூா் அருகே டேங்கா் லாரி மோதிய விபத்தில் இளைஞா் பலி.


பெரம்பலூா் அருகே டேங்கா் லாரி மோதியதில், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குன்னம் வட்டம், சடைக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இ. ராஜ்குமாா் (25). பெரம்பலூரிலுள்ள தனியாா் விற்பனை நிலையப் பணியாளரான இவா், சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்-அரியலூா் பிரதானசாலையில் ராஜ்குமாா் சென்ற போது, மன்னாா்குடியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி பால் பொருள்களை ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, கும்பகோணத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் நல்லத்தம்பியைக் கைது செய்தனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: