சுவையான டெல்லி கேரட் அல்வா இப்படி செய்யலாம்.

911

சுவையான டெல்லி கேரட் அல்வா இப்படி செய்யலாம்.

சுவையான டெல்லி கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

வறுத்த முந்திரிப்பருப்பு – 10,

டெல்லி கேரட் – 200 கிராம்,

சர்க்கரை – 400 கிராம்,

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

நெய் – 100 மில்லி,

பால் – 200 மில்லி.

சுவையான வெஜிடபுள் இடியாப்பம் செய்வது எப்படி? 

குடலை எளிதாக சுத்தம் செய்ய…

செய்முறை:

டெல்லி கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைக்கவும். வாணலியில் நெய்விட்டு அரைத்த விழுதை வதக்கவும். பால் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை சேர்த்து கெட்டியாக அல்வா பதம் வரும் வரை கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இத்துடன் முந்திரிப்பருப்பை உடைத்து நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

கேரட்டுடன் பால்கோவா சேர்த்தும் கிளறலாம். சுவை கூடும். பாதாம், பிஸ்தா, முந்திரி, கேரட் எல்லாம் சேர்த்து அரைத்து சர்க்கரை சேர்த்ததும்  டெல்லி அல்வா ரெடி.
%d bloggers like this: