டெல்லி தீ விபத்து

டெல்லி அருகே மரச் சாமன்கள் விற்கும் சந்தையில் பயங்கர தீ விபத்து.

டெல்லி அருகே மரச் சாமன்கள் விற்கும் சந்தையில் பயங்கர தீ விபத்து.

டெல்லி அருகே காளிந்தி குன்ச் மெட்ரோ ஸ்டேஷன் அருகிலுள்ள மரச் சாமான்கள் விற்பனை செய்யும் அங்காடியில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.  காலை சுமார் 6 மணியளவில் இந்த தீவிபத்து உண்டானது.

இந்த தீ விபத்தை அணைக்கவும் கட்டுக் கொள் கொண்டுவர 17 தீயணைப்பு படை களத்தில் இறங்கியது.  இருந்தும் மரச் சாமான்கள் என்பதால் இன்று மதியம் வரை தீயைக்  கட்டுக்குள் கொண்டுவரப் போராட்டமாக இருந்தது.

இதனால் மெட்ரோ ட்ரைனின் மெஞந்தா லைனில் இயக்கப்படும் அனைத்து மெட்ரோ ரயில்களும் பல மணிநேரம் இயக்கப்படவில்லை. காலை நேரத்தில் அதிகமானோர் வேலைக்கும், பள்ளி கல்லூரிகள் செல்லும் நேரத்தில் இரயிலில் போக முடியாமல் பாதிப்புக்கு உள்ளானார்கள்.  டெல்லி மெட்ரோ ரயிலின் சார்பாகப் பயணிகள் புளு லைன் ரயில்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அத்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

தீ உண்டானதற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்தில் எந்த ஒரு உயிர் இழப்பும் இல்லை என்று தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்ட பல மணிநேரங்கள் ஆனது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

%d bloggers like this: