39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.

 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.


ஹைதரபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த  ஐபில் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இவ்வாட்டத்திற்கு முன்பாக ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி மூன்று தோல்வி என 8 புள்ளிகள் பெற்ற டெல்லி அணி. ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி மூன்று தோல்வி என ஆறு புள்ளிகள் பெற்ற  சன்ரைசர்ஸ் அணியும் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 155 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்தது. காலின் முன்ரோ 40 ரன்களும் ஷ்ரேயஸ் 45 ரன்களும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணியின் கலில் அகமது மூன்று விக்கெட்களும் புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 156 ரன்கள் என்ற இலக்கில் தமது பேட்டிங்கை தொடர்ந்தது.  சன்ரைசர்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பேரிஸ்டோ களமிறங்கினர். டேவிட் வார்னர் 51 ரன்களும் பேரிஸ்டோ 41 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, சன்ரைசர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

டெல்லி அணி பந்துவீச்சாளர்களில் ரபடா 4 விக்கெட்களையும் கிறிஸ் மோரிஸ் மற்றும் கீமோ பால் தலா மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர்:

ப்ரித்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பந்த், கொலின் மன்ரோ, கிறிஸ் மோரிஸ், ஆக்ஸார் படேல், கீமோ பால், அமித் மிஸ்ரா, கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்:

கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், விஜய் ஷங்கர், ரிக்கி பூய், தீபக் ஹூடா, அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா.

ஆட்ட நாயகனாக கீமோ பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஓவர் பந்துவீசி 17 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  பேட்டிங்கில் 4 பந்துகளில் 7 ரன்னும் எடுத்திருந்தார்.
Leave a Reply

%d bloggers like this: