குளிக்காத கணவனுக்கு டிவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய மனைவி.

Hits: 0

குளிக்காத கணவனுக்கு டிவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய மனைவி.


கணவர் ஒரு வாரமாக குளிக்காமல், ஷேவ் செய்துகொள்ளாமல் இருக்கிறார் எனக் கூறி மனைவி விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர் சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் கலப்புத் திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. 25 வயதான கணவர் ஒரு கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கணவர் அடிக்கடி ஒரு வாரத்துக்கு மேல் தன் தாடியை ஷேவ் செய்வதில்லை, ஒரு வாரத்துக்கு மேலாக குளிக்காமல் இருக்கிறார் என புகார்களைக் கூறி மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் விவாகரத்து முடிவை கைவிடுமாறு வலியுறுத்தியும் அதனை அவர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.

மனைவி நோட்டீஸ் அனுப்பியதால் கணவரும் பதிலுக்கு விவகாரத்துக்குச் சம்மதம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், கணவன் – மனைவி இருவரும் ஆறு மாதத்துக்கு பிரிந்திருக்குமாறு போபால் குடும்ப நீதிமன்ற நீதிபதி ஆர். என். சந்த் அறிவுறுத்தியுள்ளார். ஆறு மாதம் கழிந்த பின் விவாகரத்து வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply