டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை.

டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை.

தொடர் லஞ்சப்புகார் வந்ததை அடுத்து சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரூ.2.40 ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.

சென்னை டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் அண்ணா சாலை எல்.எல்.ஏ கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு டாஸ்மாக் சென்னை முதுநிலை பிராந்திய முதுநிலை மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன்  மேலாளராக முத்துகுமாரசாமி  பணியாற்றுகிறார். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களின் 7 கோட்டங்கள் இவருக்கு கீழ் வருகிறது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இன்று மதியம்  2 மணி அளவில் இந்த அலுவலகத்தில் புகுந்து, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் . டிஎஸ்பி சங்கர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்  இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

முத்துகுமாரசாமி அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ. 2.4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதுநிலை பிராந்திய மேலாளர் முத்துகுமரசாமியிடம் விசாரணை நடத்தினர்.

2 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 7 மணி அளவில் நிறைவுப்பெற்றது. தொடர்ந்து விசாரணையும் நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கு முன்னர் இதே பொறுப்பில் பணியிலிருந்த முதுநிலை மேலாளர் குணசேகரன் பணி மாறுதலுக்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரால் பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த இடத்திற்கு முத்துகுமாரசாமி வந்தார்.

5total visits,3visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: