ஜோதிடம் பொய்த்ததால் ஜோதிட மையத்தை தரைமட்டமாக்கிய சீன பெண்

ஜோதிடம் பொய்த்ததால் ஜோதிட மையத்தை தரைமட்டமாக்கிய சீன பெண்.


சீனாவில் தனக்கு கூறிய ஜோதிடம் தவறாக இருந்ததால், ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தையே இடித்து தரை மட்டமாக்கிய பெண்ணை போலீசார் சமாதானம் செய்துள்ளனர்.

சீனாவின் சிசுவான் மாகாணம் மியான்யங் என்ற பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் வாங். இவர் கடந்தாண்டு அங்குள்ள பிரசத்தி பெற்ற ஜோதிடரை சந்தித்து ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அவரை பார்த்த ஜோதிடர் நீ 2018ம் ஆண்டை பார்க்க மாட்டாய், அதற்குள் இறந்து விடுவாய் என்று கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் ஒவ்வொரு நாளையும் வேதனையுடனே கழித்துள்ளார்.

இவ்வாறாக ஒரு வருடம் கழிந்த பின்பும், அவர் ஆரோக்கியமாக இருந்துள்ளார். ஜோதிடரின் பேச்சைக் கேட்டு ஒரு வருடம் வேதனையில் சுற்றி திரிந்ததை எண்ணி எண்ணி ஆத்திரமடைந்த அப்பெண், நேராக ஜோதிட நிலையத்துக்கு சென்று ஜோதிடருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அப்பெண், ஜோதிட நிலையத்தையே இடித்து தரை மட்டமாக்கினார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், ஜோதிடரை மன்னிப்பு கேட்க சொல்லி சமாதானபடுத்தினர்.

Source: samayam
Leave a Reply

%d bloggers like this: