சமீபத்திய பதிவுகள்
Search

காற்றின் மொழியைத் தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படம்.

காற்றின் மொழியைத் தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படம்.

திருமணத்திற்கு பின் சினிமா துறையை விட்டு விலகியிருந்த நடிகை ஜோதிகா  நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்திருந்தார். பின் ‘நாச்சியார்’, ‘மகளிர் மட்டும்’, செக்க சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் நடித்தார்.

காற்றின் மொழிக்குப் பின் ஜோதிகாவின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமாகும். இன்று முறைப்படி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதில் படத்தயாரிப்பாளர்களின் ஒருவரான ராஜசேகரபாண்டியன், நடிகை ரேவதி, நடிகர் சூர்யா, யோகி பாபு மன்சூர் அலிகான் ஆனந்த்ராஜ் உட்பட பலர் நடிக்கவுள்ளனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
Leave a Reply

%d bloggers like this: