துபை ஜெபல் அலி விமான நிலையத்தில் தற்காலிக விமான சேவைகள்.

Hits: 0

துபை ஜெபல் அலி விமான நிலையத்தில் தற்காலிக விமான சேவைகள்.


ஏப்ரல்-16 முதல் மே-30 வரை எல்லா விமானங்களும் (எமிரேட்ஸ் தவிர) ஜெபல் அலி ஏர்போர்ட்டில் இயங்கும் என்பதாக அமீரக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

துபாய் ஏர்போர்ட்டின் ஓடுதளம் (ரன்வே) மராமத்து பணி  நடைபெற இருப்பதால் எமிரேட்ஸ் விமானம் மட்டுமே துபாய் ஏர்போர்ட்டில் செயல்படும். மற்ற விமானங்கள் ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், சூடான், ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் நேபால்  உட்பட 42 விமான நிலையங்களுக்கான விமான சேவைகளை இந்த குறிப்பிட்ட காலங்களில்  ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டிலிருந்து இயக்கப்பட உள்ளதாக துபையிலிருந்து இயங்கும் ப்ளைதுபை (Fly Dubai) நிறுவனம் அறிவித்துள்ளது.

எட்டு விமானங்கள் மட்டும் துபை விமான நிலையம் மற்றும் ஜெபல் அலி விமான நிலையத்திலிருந்தும் இயங்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் பிளைட்டுகள் எப்போதும் போல துபை இன்டர் நேஷனல் விமானநிலையத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எமிரேட்ஸ் விமானங்களின் நேரங்களில் மாற்றம் உண்டாகும், விமான சேவைகள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த குறிப்பிட்ட 45 நாட்களுக்கு 48 விமான சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இது எப்போதும் இயக்கப்படும் விமான சேவைகளில் 25% குறைவு என  எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த 45 நாட்களில் வெளிநாட்டிலிருந்து துபை வருவோர் தங்களை அழைக்க வருபவர்களிடம் தெளிவாக ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட் வருவதாக தெரிவித்து விடுங்கள். துபையிலிருந்து வெளிநாடு செல்வோர் ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்டுக்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாக சென்று விடுங்கள். ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட் துபையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெபல் அலி ஏர்போர்ட்டிலிருந்து செல்லும் துபை டேக்ஸி தமது ஆரம்ப தொகையை 75 சதவிகிதம் குறைக்க உள்ளது. அதாவது துபை டேக்ஸியில் இதுவரை 20 திர்ஹமாக இருக்கும் ஆரம்ப தொகையை 5 திர்ஹமாக குறைக்க உள்ளது. இதுவும் இந்த குறிப்பிட்ட 45 நாட்களுக்கு மட்டுமே.

ஏப்ரல் 16 முதல் மே 30, 2019 வரை ஜெபல் அலி விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமானங்களின் முழு பட்டியல் :

 • Abha (AHB)
 • Addis Ababa (ADD)
 • Ahmedabad (AMD)
 • Alexandria (HBE)
 • Amman (AMM)
 • Bahrain (BAH)
 • Bishkek (FRU)
 • Chennai (MAA)
 • Chittagong (CGP)
 • Colombo (CMB)
 • Dammam* (DMM)
 • Delhi (DEL)
 • Esfahan (IFN)
 • Faisalabad (LYP)
 • Gassim (ELQ)
 • Gizan (GIZ)
 • Ha’il (HAS)
 • Hofuf (HOF)
 • Hyderabad (HYD)
 • Istanbul (SAW)
 • Jeddah (JED)
 • Kabul (KBL)
 • Karachi (KHI)
 • Kathmandu (KTM)
 • Khartoum (KRT)
 • Kochi (COK)
 • Kozhikode (CCJ)
 • Kuwait (KWI)
 • Lar (LRR)
 • Lucknow (LKO)
 • Mashhad (MHD)
 • Medina (MED)
 • Multan (MUX)
 • Mumbai (BOM)
 • Muscat (MCT)
 • Najaf (NJF)
 • Riyadh (RUH)
 • Shiraz (SYZ)
 • Sialkot (SKT)
 • Tabuk (TUU)
 • Ta’if (TIF)

துபை மற்றும் ஜெபல் அலி இரண்டிலும் செயல்படும் விமானங்களின் விபரங்கள்.

 • Alexandria (HBE)
 • Bahrain (BAH)
 • Dammam (DMM)
 • Jeddah (JED)
 • Kabul (KBL)
 • Kathmandu (KTM)
 • Kuwait (KWI)
 • Muscat (MCT)
Leave a Reply