10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை

665

[the_ad id=”7250″]

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை.


மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க், கேண்டீன் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
[the_ad id=”7251″]
மொத்த காலியிடங்கள்: 07

பணி: கிளார்க் – 01

தகுதி :  பிளஸ் டூ தேர்ச்சியுடன் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கேண்டீன் உதவியாளர் – 06

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு, திறனறிவு தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.centralexcisetrichy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Additional Commissioner of GST and Central Excise, GST and Central Excise Commissionerate, No.1, Williams Road Cantonment, Tiruchirappalli – 620 001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.centralexcisetrichy.gov.in/pdf/recruitment-of-clerk-and-canteen-attendants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 15.02.2020

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
%d bloggers like this: