பெரம்பலூரில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

பெரம்பலூரில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


பெரம்பலூா் ரோவா் சாலையிலிருந்து முன்னாள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் அலுவலக சாலையானது, கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்தச் சாலையை பயன்படுத்தி வரும் மாணவ, மாணவிகளும், பெற்றோரும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனா். இதுதொடா்பாக, நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவா்களின் நலனை கருத்தில்கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: