செல்போன் இங்கெல்லாம் வைக்காதீங்க…

பல்லுகூட இல்லாம இருந்திடுலாம் ஆனா செல்லு இல்லாம இப்ப இருக்க முடியரதில்லை. செல்லில்லாம உடலில்லை செல்போன் இல்லாம இப்ப நாம இல்லை. என்ன ரொம்ப மொக்கையா இருக்கா? ஓகே மேட்டருக்கு வருவோம்.

மொபைல் போனை இதுவரை இங்கெல்லாம் வச்சிருந்தால் இன்றோட நிருத்திக்கோங்க இனிமே இங்கெல்லாம் வைக்காதீங்க. ப்ளீஸ்…

  • பெண்கள் அவர்களின் மேலாடைகளுக்குள் மொபைலை வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.
  • தொடை அருகில் மொபைலை வைப்பதால், அது இடுப்பு எலும்புகளை பலவீனப்படுத்தி விடும். எனவே தொடை அருகில் மொபைலை வைக்கவே கூடாது.
  • நேரடியாக நமது உடலில் படும்படி செல்போனை வைக்கக் கூடாது. ஏனென்றால் மொபைலிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு பாதிப்பை உண்டாக்கும்.
  • மொபைல் சாரஜ் செய்யும் போது அதன் அருகில் இருக்க கூடாது. ஏனெனில் அதனால் மின்காந்த கதிர்வீச்சுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • குளிர்ச்சியான மற்றும் வெப்பமான இடங்களில் மொபைலை கட்டாயம் வைக்கக் கூடாது. ஏனெனில் அதனால் மின்னணு இயந்திரங்கள் நமக்கு தீங்கை விளைவிக்கும்.
  • குழந்தைகளின் அருகில் மொபைலை வைக்கக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் குழந்தைகளுக்கு செயல்திறன் மற்றும் கவனக்குறைவு போன்றவை ஏற்படும்.
  • மொபைலை தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் நோட்டிபிகேஷன் வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியை பாதித்து, தலைவலியை உண்டாக்கும்.
  • மொபைலை பின்பக்கம் மற்றும் பின்பக்க பாக்கெட்டில் வைக்கக் கூடாது. ஏனெனில் அதனால் தொலைபேசியின் மின்காந்த கதிர்வீச்சானது உடல்நலம், விந்தின் தரம் மற்றும் அளவை மோசமாக பாதிக்கும்.Leave a Reply

%d bloggers like this: