புதிய செய்தி :

செல்பி எடுத்து சேர் செஞ்சா சொத்தே போயிடுமாம்.

செல்பி எடுத்து சேர் செஞ்சா சொத்தே போயிடுமாம்.


என்ன உளர்றீங்க அப்படீன்னு நீங்க கேக்குறது எனது காதுல விழுகிறது. கீழுள்ள விசயத்தை படிங்க அப்புறம் நீங்களே சொல்லுவீங்க.

இன்றைய காலத்தில் செல்பியா வாழுரதும் செல்பி எடுத்து வாழுரதும் ஒரு பேஷனா போச்சு இந்த ரெண்டுமே பிரச்சனைதான். முதலாவது நாட்டுக்குப் பிரச்சனை இரண்டாவது வீட்டுக்கு பிரச்சனை. இப்படி இருந்தாலும் செல்பி மோகம் குறையாமல் கூடிக்கொண்டே போய்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

நச்னு நாலு செல்பி எடுத்து நம்ம பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போட்டாத்தான நாம வெச்சிருக்கிற மாடர்ன் மொபைலுக்கே கெத்து. அது கல்யாண வீடானாலும் சரி, கருமாதி வீடானாலும் சரி, பிளைட்ல இருந்தாலும் சரி சேவிங்க் பண்ண பிளேடோடு இருந்தாலும் சரி செல்பி செல்பி செல்பி…

செல்பி மோகத்தில செத்தவர்களும் நிறையபேர். சரி மேட்டருக்கு வருவோம். நமது செல்பியை சமூக விரோதிகள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது வெற்றியை குறிக்கும் வகையில் இளைஞர்கள் அடிக்கடி விரல்களை வி (V) வடிவில் காட்டி செல்பி எடுக்கிறார்கள்.

சிலர் இந்த புகைப்படங்களை எடுத்து, அதில் நமது விரல்களில் காணப்படும் ரேகைகளை துல்லியமாக காட்டும் தொழில்நுட்ப உதவியுடன் பதிவு செய்து செயற்கை முறையில் நமது கை ரேகையை தயாரித்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இப்படி செயற்கையாக தயாரிக்கப்படும் கைரேகை மூலம் நமது முழு விவரத்தையும் கண்டுப்பிடிக்க முடியும்.

ஒரு வேளை தம்ஸ்-அப் போல் விரல்களை மடக்கி கட்டை விரலை உயர்த்தும் செல்பியில் உங்கள் கட்டை விரல் ரேகையை நமது விரோதிகள் எடுத்து போலி கைரேகை தயாரித்து நமது சொத்துக்களை கூட அவர்கள் பெயருக்கு மாற்ற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

அட போங்க சார் எங்கிட்ட சொத்து இருந்தாதானே ஆட்டைய போடுவாங்கன்னு கிண்டலா சிரிக்கிறது தெரியுது. நான் படிச்சேன் அத உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன்.

-அபு இர்ஷாத்-
Leave a Reply