பெரம்பலூரில் செயல்படாத தானியங்கி சிக்னல்

பெரம்பலூரில் செயல்படாத தானியங்கி சிக்னல்


பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள தானியங்கி சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடுமையான வாகன நெரிசலால் ஓட்டுநா்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து, மாவட்ட காவல் துறையினரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடா்ந்து நிகழும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தானியங்கி சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அல்லது, போக்குவரத்து போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: