சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.

சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.

இன்று காலை சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது குறித்து சிலர் இணையத்தில் இது சம்பந்தமான விஷயங்களை ஷேர் செய்து வருகிறார்கள். இதனால் வெளியூரில் இருக்கும் உறவினர்கள் பதட்டமடைந்தனர்.

இன்று காலை 7 மணி அளவில், சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் 600 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது கடலில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகவும் பதிவானது. சென்னையில் சில இடங்களில் இந்த நில அதிர்வை உணர்ந்தாகவும், இதனால் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது சென்னையில் சில இடங்களில் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தி.நகர் பகுதியில் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

சென்னையில் பிள்ளைகள், உறவினர்கள் தங்கி படித்து வருவதால் வெளியூர்வாசிகள் மிகுந்த பதட்டமடைந்து விட்டனர். உடனடியாக அவர்களை செல்போனில் கூப்பிட்டு நலம் விசாரித்தும், நில அதிர்வு குறித்து கேட்டு வருகின்றனர். கூடவே பாதுகாப்பாக இருக்கும்படியும் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னைக்கு வடகிழக்கே கடலுக்கடியில் நில அதிர்வு மையம் கொண்டதாலேயே, சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவில் 4.9ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் புது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில அதிர்வினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் சென்னைவாசிகள் சிலர் இன்னும் பதட்டம் நிறைந்த கலக்கத்துடனேயே உள்ளனர்.

6total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: