சிஎஸ்கேவை வச்சு செஞ்ச மும்பை இந்தியன்ஸ்!

சிஎஸ்கேவை வச்சு செஞ்ச மும்பை இந்தியன்ஸ்!


சென்னை சூப்பர் கிங்ஸ்-ல் தோனி இல்லையென்றால் தோல்வி என முடிவு செய்து கொள்ளலாம். ஆம்அது போலத்தான் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி.

இந்தப் போட்டிக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் தோனி பங்கேற்கவில்லை. தோனி மட்டுமின்றி பாப் டு ப்லேசிஸ், ஜடேஜா ஆகியோரும் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதில் துருவ் ஷோரி, முரளி விஜய், சான்ட்னர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஆச்சரிய நகர்வாக அம்பதி ராயுடு விக்கெட் கீப்பிங் செய்தார். சுமாரான துவக்கம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. மும்பை அணிக்கு டி காக் 15 ரன்களில் வெளியேறி சுமாரான துவக்கம் அளித்தார். ஆனால், மற்றொரு துவக்க வீரர் ரோஹித் சர்மா போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார். ஹர்திக் திணறல் ரோஹித்துக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார் ஈவான் லீவிஸ். அவர் 32 ரன்கள் எடுத்தார். ரோஹித் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் ஹர்திக் பண்டியா, பொல்லார்டு ஜோடி அதிரடியாக ஆட முடியாமல் திணற, ஒருவழியாக 155 ரன்கள் எடுத்தது மும்பை. சான்ட்னர் அசத்தல் ஜடேஜாவுக்கு பதில் இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்ற சான்ட்னர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இம்ரான் தாஹிர், தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சென்னை அணியின் பேட்டிங்கில் ஒன்றிரண்டு விஷயங்களை தாண்டி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. முரளி விஜய் 38 ரன்கள் சேர்த்தார். பின்னர் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிராவோ – சான்ட்னர் கடைசி நேரத்தில் பிராவோ 20, சான்ட்னர் 22 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முயன்றனர். ஆனால், அது பலனளிக்கவில்லை.

சென்னை அணி 17.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தரமான மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு கூட்டணிக்கு முன் சென்னை பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடி விக்கெட்களை தாரை வார்த்தனர். தோனி இல்லாத சிஎஸ்கே என்றெல்லாம் பாவம் பார்க்காமல், மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று சென்றது. மலிங்கா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா, க்ருனால் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்த தோல்வியால் வெற்றிப்புள்ளிகளில் எந்த ஒரு பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் தோனி இல்லா அணி தடுமாறுவதை பார்க்க முடிகிறது.
Leave a Reply

%d bloggers like this: