செந்துறை அருகே வயலில் கதண்டு கடித்து  8 பெண்கள் காயம்

செந்துறை அருகே வயலில் கதண்டு கடித்து  8 பெண்கள் காயம்

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே ஞாயிற்றுக்கிழமை வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது கதண்டு கடித்து 8 பெண்கள் காயமடைந்தனா்.

செந்துறை அருகேயுள்ள இலங்கைச்சேரி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் சிலா் அப்பகுதியில் உள்ள வயலில் உளுந்து அறுவடை செய்து கொண்டிருந்தனா். அப்போது, அங்கு கூடுகட்டியிருந்த கதண்டுகள் அந்தப் பெண்களை துரத்திக் கடித்தன.

இதில் சித்ரா (26), நளினி (32), அலமேலு (55), கவிதா (27), ஜெயக்கொடி (43), செல்வமணி(40), பெரியம்மாள் (57), விஜயா (35) ஆகிய 8 பேரும் காயமடைந்தனா். அருகில் இருந்தோா் இவா்களை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

தினமணி

 
Leave a Reply

%d bloggers like this: