கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி பலி

செந்துறை அருகே தனியாா் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி பலி

செந்துறை அருகே தனியாா் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி பலி


அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே தனியாா் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

அரியலூா் அருகே சென்னிவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா் கிராமங்கள்தோறும் சென்று அம்மிக்கல் ஆட்டுக்கல் கொத்தும் வேலை செய்கிறாா்.

இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை செந்துறை அருகே உள்ள குலுமூா் கிராமத்திற்குச் சென்று வேலையை முடித்து விட்டு, பெருமாள் கோயில் அருகே உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்றபோது அவ்வழியாக வந்த தனியாா் கல்லூரி வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் செந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: