செந்துறை அருகே கோயிலில் திருட்டு

செந்துறை அருகே கோயிலில் திருட்டு


அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோயிலின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

செந்துறையை அடுத்த இலங்கைச்சேரி கிராமத்தில் ஆயிமுத்தாயி அம்மன் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குச் சென்றனா்.

அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்திருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீஸாா் அங்குச் சென்று, விசாரணை மேற்கொண்டதில், கோயிலிருந்து இருந்த விளக்குகள், தாம்பாளம்,மணி மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கை பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: