செந்துறையில் நடுரோட்டில் சுண்ணாம்புக் கல்லை கொட்டிய லாரியை மக்கள் சிறைபிடித்தனர்.

செந்துறையில் நடுரோட்டில் சுண்ணாம்புக் கல்லை கொட்டிய லாரியை மக்கள் சிறைபிடித்தனர்.

அரியலூர் செந்துறை அருகே உள்ள உஞ்சினியில் செயல்பட்டு வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து கீழப்பழுவூர் தனியார் சிமென்ட் ஆலைக்கு சிமென்ட் தயாரிப்பதற்காக சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் விதிகளை மீறி அதிகளவில் பாரம் ஏற்றிக் கொண்டு செல்கிறது. செந்துறை கடைவீதிகளில் உள்ள வேகத்தடைகளில் வேகத்தை குறைக்காமல் இந்த வாகனங்கள் கடந்து செல்வதால் அதிலுள்ள சுண்ணாம்புக்கல் சாலையில் கொட்டி விபத்து ஏற்பட்டது.

பின்னால் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி இடித்துக் கொண்டனர். இதனை கண்ட அருகிலுள்ள பொதுமக்கள் லாரியினை சிறைபிடித்தனர். விதிகளை மீறி செயல்படும் கனரகவாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த செந்துறை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செந்துறை முதல் அரியலூர் நான்கு ரோடு வரை இருபதுக்கும் மேற்பட்ட வேகத்தடைகள், மற்றும் தடுப்பு அரண்கள் வைத்தும் அவற்றுக்காக வேகத்தை குறைக்காமல் இந்த வகை பெரிய வாகனங்கள் செல்கின்றன.

வேகத்தடைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது இலகுரக கார்கள் இருசக்கரவாகனங்கள் தான் எனகூறினர், மேலும் அரியலூர் – செந்துறை சாலையில் சிமென்ட் ஆலை லாரிகளை சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரியநடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் கூறினார். மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சுண்ணாம்புக்கல் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் சற்றுநேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினகரன்


அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: