செந்துறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு

செந்துறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு

செந்துறையில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் போலீஸாா். அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காவல்துறை சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், அரியலூா் அம்மாகுளம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வுக்கு காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா்.

அம்மாகுளம் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும், அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.

அதேபோல், செந்துறை, கயா்லாபாத், திருமானூா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வாளா்கள் ராஜ்குமாா், ராஜா, அன்புச்செல்வன் தலைமையில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: