உடற் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின்.

689

உடற் சூட்டைத் தணிக்கும் பாதாம் பிசின்.

பாதாம் பிசின் நாம் நிறையக் கேள்விப்பட்டிருப்போம். சில நேரங்களில் சாப்பிட்டிருப்போம். இப்போது அதன் பயன்களைத் தெரிந்து சாப்பிடுவோம். இந்த பாதாம் பிசின் எளிமையாகக் கிராமங்களிலுள்ள மளிகைக் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்குக் கற்கண்டு போல இருக்கும் ஆனால் அவ்வளவு வெண்மையாக இருக்காது. அப்படியே சாப்பிட முடியாது தண்ணீரில்  குறைந்தது 6 மணி நேரமாவது ஊரவைக்க வேண்டும். ஊறிய பாதாம் பிசின் ஜெல்லி போல இருக்கும். அதை அப்படியே சாப்பிடலாம். வெறும் பாதாம் பிசின் ஊரவைத்துச் சாப்பிட்டால் அதில் எந்த சுவையும் இருக்காது. பால், தேன் அல்லது சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.

பாதாம் பிசின் நன்மைகள்
  • உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களுக்கு நல்ல நிவாரணி. இதனால் இதை அனைத்து வயதினர்களும் சாப்பிடலாம்.
  • செரிமான கோலாரை உண்டாக்கும் வயிற்று வலி, அல்சர் போன்றவற்றை போக்கவல்லது.
  • இதிலுள்ள தாதுகள் தோல் மற்றும் எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.
  • சருமத்தில் உண்டாகும் வறட்சி, வெடிப்புகளைச் சரி செய்கிறது.
  • சூட்டினால் உண்டாகும் நீர்க் கடுப்பு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரகக் கல் போன்றவை பாதாம் பிசின் சாப்பிடுவதால் பறந்து போகும்.
  • உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருவதுடன் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது.
  • ஆண் மலட்டுத் தன்மை உடையவர்கள் இதைக் குடித்து வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.

இதையும் படிங்க [quote]குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…[/quote]

இதையும் படிங்க[quote]சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.[/quote]

இவ்வளவு நன்மைகள் இருக்கும் இந்த பாதாம் பிசின் சாப்பிடாமல் விட்டுவிடாதீர்கள். அவ்வளவு காஷ்ட்லியும் இல்லை. அப்புறமென்ன சாப்பிட்டுப் பயனடைவோமா?
%d bloggers like this: