சுவாமி வீதி உலா

பெரம்பலூரில் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா

413

பெரம்பலூரில் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா.

பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் இரவில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான உதயகருட சேவையும், இரவில் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவில் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும், 27-ந்தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும், இரவில் குதிரைவாகனத்தில் திருவீதி உலாவும், 28-ந்தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், கோவில் செயல் அலுவலர் அனிதா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

keywords: சுவாமி வீதி உலா, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.




%d bloggers like this: