சுகாதாரத்துறை

சுகாதாரத்துறையில் வேலை செய்ய இலவச பயிற்சி.

495

சுகாதாரத்துறையில் வேலை செய்ய இலவச பயிற்சி.

கொரோனாவை ஒழிக்க சுகாதாரத்துறையில் முன்கள பணியாளர்களாக பணியாற்ற இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கிசான் கவுசல் விகாஸ் யோஜனா என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கும் விதமாக முன்களப்பணியாளர்களாக பணியாற்ற இலவசமாக கீழ்காணும் பிரிவுகளில் ஒரு மாதம் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் அவசர மருத்துவ டெக்னீசியன் பணி, பொது மருத்துவ சேவை உதவியாளர், தீவிர சிகிச்சை பிரிவு உதவியாளர், வீட்டு சுகாதார உதவியாளர், மருத்துவ உபகரண தொழில்நுட்ப உதவியாளர், ரத்த நாள துளையிடும் பணியாளர் ஆகிய பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில்முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம். மேற்காணும் பயிற்சிகளில் 10 மற்றும் 12-வது வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இந்த பயிற்சிகளில் சேர விரும்புவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488451405 செல்போன் எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரத்னா (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: