பட்டுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வல்லுறவு

பட்டுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வல்லுறவு


சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த டிராக்டா் ஓட்டுநருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள நறுவழிக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் எம். சங்கா் (27). டிராக்டா் ஓட்டுநா். இவா் 2013, நவ. 10-ம் தேதி 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை சாக்லேட் தருவதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றாா். அங்குள்ள ஒரு அறையில் அச்சிறுமியை சங்கா் பாலியல் வல்லுறவு செய்தாா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம். எழிலரசி விசாரித்து சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி

தஞ்சை மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: