சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

பெரம்பலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

604

பெரம்பலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 21). இவர் 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பாரதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி
%d bloggers like this: