பெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை

பெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை


பெரம்பலூர் அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.பெரம்பலூர் அருகே எளம்பலூரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (66). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்தாண்டு பிப்ரவரி 22ம் தேதி தர்மலிங்கம், அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடைக்கு மிட்டாய் வாங்க வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து தர்மலிங்கத்தை கைது செய்தனர். பிறகு தர்மலிங்கம், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும் அந்த தண்டனையிலிருந்து சில மாதங்களில் தர்மலிங்கம் ஜாமீனில் வெளிவந்து விட்டார். இதனிடையே பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அதில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கத்துக்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

தினகரன்

மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்


Leave a Reply

%d bloggers like this: