சிறப்பு ஹோமம்

கொரோனா தொற்றில் இருந்து விடுபட சிறப்பு ஹோமம்.

398

கொரோனா தொற்றில் இருந்து விடுபட சிறப்பு ஹோமம்.

பன்னிரு திருமுறைகளில் ஒன்றான பெரியபுராணத்தை இயற்றிய தெய்வ சேக்கிழார் நாயனார் அவதரித்த வைகாசி பூச நட்சத்திரத்தை முன்னிட்டு குருபூஜை விழா எளம்பலூர் பிரம்மரிஷிமலை மகா சித்தர்கள் அறக்கட்டளை மெய்யன்பர்கள் சார்பில் நடந்தது. சு.ஆடுதுறையில் உள்ள சுகந்தகுந்தளாம்பிகை உடனுறை அபராதரட்சகர் (குற்றம் பொறுத்த ஈஸ்வரர்) கோவிலில் நடந்த இந்த விழாவையொட்டி உலக மக்கள் கொரோனா தொற்றில் இருந்து நலம் பெறவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காத்திடவும், பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழித்து தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்திடவும் வேண்டி சிறப்பு வழிபாடு, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ருத்ர ஹோமம், சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சமூக இடைவெளி கடைபிடித்து, முக கவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் அரசு சித்த மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

Our Facebook Page




%d bloggers like this: