துபாய் ஜுமைராவில் சிறப்பு தமிழ் பட்டிமன்றம் நடைபெற்றது!

துபாய் ஜுமைராவில் சிறப்பு தமிழ் பட்டிமன்றம் நடைபெற்றது!


பல வருடங்களுக்குப் பிறகு அமீரகத்தில் தமிழ் பிரபலங்கள் பங்கு பெறும் தமிழ் பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 2ஆம் தேதி வியாழனன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் ஜுமைரா எமிரேட்ஸ் தியேட்டரில் திரு சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் பட்டி மன்றம் நடைபெற்றது.

இந்த பட்டி மன்றத்தில் அமீரகத்தின் தமிழ் பேச்சாளர்களுடன் திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்கள்.  வியாழனன்று மாலை 7 மணி முதல் 11 மணி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் பெரும் திரளாக வந்து ரசித்து மகிழ்ந்தனர்.

தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த மூவரும் பட்டிமன்ற மேடையில் பார்வையாளர்களின் மனதை சிறப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் கொள்ளை கொண்டனர். இவர்களுடன், பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாய் அறிமுக பேச்சாளர்கள் பாலாஜி பாஸ்கரன் மற்றும் காயத்ரி ரங்கசுவாமியும், அனுபவமுள்ள பேச்சுத்திறன் கொண்ட சசிகுமார் மற்றும் சௌமியா விமல் நால்வரும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

சிறுமிகள் ஆஃபினா, அஞ்சனா, அனன்யா, இவர்களின் பாடல்களும், ப்ரீத்தி குழுவினரின நடனமும், அர்விந்த் பாரதியின் பல குரல் திறமை நிகழ்ச்சியும் சிறப்பு விருந்தினர் முதல் அனைவரையும் வியக்க வைத்தது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடனும், மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

பண்பலை அறிவிப்பாளர் மயில் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு என்.எம்.சி மருத்துவமனை, பெட்ரோகோட் நிறுவனம் அமீரக தமிழ் பண்பலை 89.4, பெருமாள் கடை ஆகியோர் ஆதரவுடனும், மற்றும் பலர் அளித்த சிறப்பான உறுதுணையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடத்த முடிந்தது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரமா மலர் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த ரிதம் ஈவண்ட்ஸ், சௌமியா விமல், ஷானவாஸ் மற்றும் அனைவர்க்கும் மனமார நன்றி தெரிவிப்பதாக ஏற்பாட்டாளர் ரமா மலர் தெரிவித்தார்.

Photo Gallery
Leave a Reply

%d bloggers like this: