Girlfriend who killed her boyfriend in Chidambaram

சிதம்பரத்தில் காதலனை வெட்டிக் கொன்ற காதலி

274

சிதம்பரத்தில் காதலனை வெட்டிக் கொன்ற காதலி.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (21). இவரும் சிதம்பரம் அரங்கநாதன் தெருவில் வசிக்கும் பாபு மகள் சுவேதா (16) என்ற பெண்ணும் காதலித்து வந்ததாதகவும், இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாதகவும், வாலிபர் அன்பழகன் செல்போனில் சுவேதா குறித்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று அன்பழகனை, காதலி சுவேதா தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தாயார் சத்யா, அண்ணன் ஜீவா உள்ளிட்டோர் சுவேதா பற்றிய வீடியோவை தருமாறு கேட்டு அன்பழகனை அடித்தும், அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். உடனே உடலை வீட்டிலேயே வைத்து கொலையை மறைக்க முயன்றுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்து சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் சி.முருகேசன், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்முருகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிதம்பரம் நகர காவலர் வழக்குப் பதிவு செய்து தந்தை பாபு, தாயார் சத்யா, அண்ணன் ஜீவா, காதலி சுவேதா ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Leave a Reply

%d bloggers like this: