சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. 228 பயணிகள் தப்பினர்!


டெல்லி விமான நிலையத்தில் இருந்து 228 பயணிகளுடன் A380-800 என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 8.20க்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. ஆனால் முன்பக்க சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் திசை மாற்றும் திறனை இழந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 228 பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறை டெல்லி விமான நிலையத்தில் சரிசெய்யப்பட்டது.

பின்னர் 8.38 மணிக்கு சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. டெல்லி விமான நிலையத்தில் இச்சம்பவம் காரணமாக இன்று காலை பரபரப்பான நிலை காணப்பட்டது.
Leave a Reply

%d bloggers like this: