IND20012200

“சிஏஏ”  தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

600 150 JK Mahal 1

“சிஏஏ”  தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 144 மனுக்கள் மீதான விசாரணை இன்று செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போட்கே தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இன்றைய வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமைச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது.

காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல், “மத்திய அரசு சட்டத்தை அமல் செய்வதை 2 மாதங்கள் தள்ளிப் போடலாம் நாங்கள் தடை கோரவில்லை என்று விசாரணையின் போது கூறினார். மேலும் அவர், தேசிய குடிமக்கள் பதிவேடான என்பிஆர் நடவடிக்கைகளையும் ஒத்தி வைக்குமாறு வலியுறுத்தினார்.

விசாரணை முடிவாக, 5 நீதிபதிகள் கொண்ட நாடாளுமன்ற அமர்வு ஒன்றை உருவாக்கி அதற்குக் கீழ் சிஏஏ குறித்து விசாரிக்க பரிந்துரைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசும் நோட்டீஸுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

பெரும்பான்மையான மனுக்கள் இந்தச் சட்டமானது, சட்ட சாசனத்துக்குப் புறம்பானது என்று கூறுகின்றன. அதேபோல மத அடிப்படையில் இந்தச் சட்டம் மூலம் குடியுரிமை வழங்கப்படும் என்பதால், அனைவரும் சமம் என்கிற உரிமையையும் இந்தச் சட்டம் மீறுவதாக மனுக்கள் தெரிவித்துள்ளன. தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள், ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்திருக்கும் சிஏஏ-வுக்குத் தற்காலிகத் தடை விதிக்கச் சொல்லியும் வலியுறுத்தின.

Okinawa

Kallaru TV




Leave a Reply

%d bloggers like this: