நேற்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நேற்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை ஏழு போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் சென்னை அணியும். ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி மூன்று தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் கொல்கத்தாவும் இருந்தது.

டாஸ் வென்ற சென்னை அணி பவுளிங் எடுத்தது. மாற்றங்கள் ஏதும் இல்லாமல் சென்னை அணி களமிறங்கியது. மூன்று மாற்றங்களுடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

கொல்கத்தா அணியின் துவக்கவீரர் கிறிஸ் லின் அதிரடியாக 82 ரன்கள் குவித்தார். அவரை தவிர வேறு வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 161 ரன்கள் மட்டுமே குவித்தார்.

லின், ரஸல் ஆகியோரின் விக்கெட்கள் உட்பட நான்கு விக்கெட்களை வீழ்த்தினார் இம்ரான் தாஹிர். தாகூர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

சென்னை அணிக்கு டு பிளஸிஸ் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்தாலும், மறுமுனையில் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் தொடரில் தனது 37 வது அரைசதத்தை ரெய்னா அடித்தார். இறுதியில் ஜடேஜா ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். சென்னை அணி ஐந்து விக்கெட்கள் இழந்து 162 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சென்னை.

நேற்றைய ஆட்டத்தில்

கொல்கத்தா அணியினர்:

கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரூ ரஸ்ஸல், ஷுப்மான் கில், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, பிரசித் கிருஷ்ணா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்:

ஷேன் வாட்சன், பாப் டு ப்லெஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம் எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர்

ஆட்ட நாயகனாக இம்ரான் தாஹிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்திருந்தார்.

225total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: