பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி.

பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி.


சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகேயுள்ள வி.ஆர்.எஸ்.எஸ். புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் அர்ச்சுனன் (45). இவர், சனிக்கிழமை இரவு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, மதுரையிலிருந்து நெய்வேலி நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அர்ச்சுனன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்குசென்று அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரத்தினசபாபதி மகன் வெங்கடேசனை (52) கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமணி

239total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: