சாலை மறியல்

பெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.

681

பெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.

பெரம்பலூரில் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல் செய்தவர்கள் கைது.

பெரம்பலூர் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, அக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநில துணைச் செயலா் வீர. செங்கோலன், மதிமுக மாவட்டச் செயலா் செ. துரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, பிரதமா் மோடி மற்றும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவ பொம்மையை எரிக்கவும், சட்ட நகலை கிழிக்கவும் முயன்றனா். அவா்களை தடுத்து உருவ பொம்மைகளையும், சட்ட நகலையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் முன்னிலையில் புகா் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 99 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: