பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் பலி.

பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் பலி.


வேப்பந்தட்டை தாலுக பாண்டகப்பாடி வெண்பாவூர், வ.மாவிலங்கை, கை. களத்தூர், அய்யனார் பாளையம், மேட்டுப்பாளையம், பில்லங்குளம், காரியானூர், அரசலூர் ஆகிய வனப்பகுதிகளிலும், பெரம்பலூர் தாலுக இரட்டைமலை சந்து, மேலப்புலியூர், குரும்பலூர், குன்னம் தாலுகாவில் சித்தளி, பேரளி, ஆலத்தூர் தாலுகாவில் பாடாலூர், நக்கசேலம் ஆகிய பகுதிகளில் உள்ள வனங்களில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன.

வறட்சி காரணமாக வனப்பகுதியிலிருந்து உணவுக்காகவும், நீருக்காகவும் காடுகளை விட்டு வயல் பகுதிகள், ஊருக்குள்ளும் வந்துவிடுகிறது. இதனால் தெருநாய்களிடம் கடிபட்டும் சாலைகளில் வாகனங்களில் அடிபட்டும் இறந்து விடுகிறது.

நேற்று காலை பெரம்லூர் நகரையொட்டி வடபுறத்தில் பயணித்த மான்கள் கூட்டத்தில் ஒன்று 4ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலியானது. இது குறித்து தகவலறிந்து மாவட்ட வன அலுவலர் அசோகன், வனச்சரகர் சசிக்கு மார் உத்தரவின் பேரில் வன காப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் இறந்தமானின் சடலத்தை மீட்டு கால்நடை மருத்துவரின் பிரேத பரிசோதனைக்கு பிறகு வனப்பகுதியில் புதைத்தனர்.

மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்


Leave a Reply

%d bloggers like this: