சாரி சார், தெரியாம திருடிட்டோம்: திருடிய பொருளை திருப்பி தந்த நல்ல திருடர்கள்

சாரி சார், தெரியாம திருடிட்டோம்: திருடிய பொருளை திருப்பி தந்த நல்ல திருடர்கள்.


அமெரிக்காவில் தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. தாங்கள் திருடிய பொருள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனுக்கு வந்த பரிசு என்பதை அறிந்து கொண்ட திருடர்கள், அதை திரும்பக் கொண்டு வைத்ததுடன், கூடவே ஒரு மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்தனர்.

விக்கி மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன். இவனுக்கு மல்யுத்தம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். விக்கி-ன் பெற்றோர் அவனது பிறந்த நாளுக்கு ஒரு மல்யுத்த பெல்ட் ஒன்றை பரிசாக அளிக்க முடிவு செய்திருந்தனர்.

ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப் பொருள் வீட்டிற்கும் வந்துவிட்டது. ஆனால் அதை வீட்டில் உள்ளவர்கள் எடுக்கும் முன்பே இரண்டு பெண்கள் அதை திருடிச் சென்று விட்டனர்.  பரிசு பொருளை திருடிச் செல்லும் காட்சிகள் அந்த வீட்டிலிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது. தகவல் காவல்துறைக்கு சென்றது. காவல்துறையினர் அந்த வீடியோ காட்சியை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

எதிர்பாராதவிதமாக அந்த பார்சல் மீண்டும் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்ததை விக்கி-ன் பெற்றோர் கண்டனர். கூடவே நான்கு பக்கங்கள் எழுதப்பட்ட மன்னிப்புக் கடிதமும் அதனுடன் இருந்தது.

கடிதத்தில், உங்கள் பொருளை திருடியதற்காக வருந்துகிறோம். உடல் நலமற்ற ஒரு ஐந்து வயது குழந்தையின் பொருளை திருடும் நிலை எனக்கு வரும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. எனக்கும் ஆறு வயதில் ஒரு குழந்தை உண்டு. என்ன செய்வது, வீடில்லாமல் தெருவோரம் குடியிருக்கும் எங்களுக்கு இதனால் இரண்டு டாலர் கிடைக்குமே என்ற ஆசைதான். இதைக்குறித்து வெட்கப் படுகிறேன். என்பதாக அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. தாயும் மகளுமாகிய அந்த இரண்டு பெண்கள் மீதும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

 

 

 




Leave a Reply

%d bloggers like this: