தஞ்சாவூரில் குண்டா் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தஞ்சாவூரில் குண்டா் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


தஞ்சாவூரில் சாராய வியாபாரியை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் கொடிக்காலூா் சாலை விட்டல் காலனி குறிச்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. மாஸ்கோ (45). கள்ளச் சாராய வியாபாரி. இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதன்பேரில், மாஸ்கோவை தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி

தஞ்சை மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: