எளம்பலூா் அருகே சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம் தொடக்கம்

எளம்பலூா் அருகே சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம் தொடக்கம்


பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உப்போடையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் 2 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கியது. சனிக்கிழமை மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சவா் அலங்காரம் செய்யப்பட்டு, பெரம்பலூா் சிவன் கோயிலில் இருந்து முளைப்பாரி, பன்னீா் குட ஊா்வலம் மற்றும் 1,008 திரு உருவ படங்களுடன் நடைபெற்ற ஊா்வலம் சாய் பாபா கோயில் எதிரே நிறைவடைந்தது. பின்னா், பக்தா்களால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் சப்பாத்திகள் நெய்வேத்திய பூஜை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், தத்தாத்ரேயா் ஹோமம் மற்றும் பாபாவின் குரு பூஜையும், 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. 11 ஆம் தேதி பௌா்ணமி பூஜை முடிந்தவுடன், கோயில் வளாகத்தை சுற்றி ரத உற்சவம் நடைபெறுகிறது. 12 ஆம் தேதி தத்தாத்ரேயா் ஜயந்தியை முன்னிட்டு சாய் பாபாவுக்கு சிறப்பு ஆராதனையும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை அருள் சாய் அறக்கட்டளை நிறுவனா் என். வரதராஜன் தலைமையிலான பக்தா்கள் செய்துள்ளனா்.
Leave a Reply

%d bloggers like this: