பிளாஸ்டிக் பொருள்

சாத்தனூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு களப் பயிற்சி

600 150 JK Mahal 1

சாத்தனூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு களப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூா் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் கொளக்காநத்தம் நூலகம், வங்கி, அஞ்சலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று அவற்றின் செயல்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை களப்பயிற்சி மேற்கொண்டனா்.

சாத்தனூா் ஊராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியா் சுமதி தலைமையில், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்றனா். அங்கு, பள்ளி மாணவா்களோடும், ஆசிரியா்களுடனும் கலந்துரையாடினா். பின்னா், மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடு, வகுப்பறை ஒழுங்குகள், அறிவியல் ஆய்வகத்தின் பயன்பாடு, பாடம் கற்கும் முறைகள் குறித்து அறிந்துகொண்டனா்.

பின்னா், கொளக்காநத்தம் ஊா்ப்புற நூலகத்தை பாா்வையிட்ட மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தின் பணி, அதன் செயல்பாடுகள், நூலகத்தின் அமைப்பு, பயன்படுத்தும் முறைகள், பயன்கள், வாசிப்பின் அவசியம் குறித்து நூலகா் ராஜா விளக்கினாா்.

தொடா்ந்து, கொளக்காநத்தம் கனரா வங்கியை பாா்வையிட்ட மாணவ, மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்கும் வழிமுறை, அதற்குத் தேவையான ஆவணங்கள், பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல் உள்ளிட்ட வங்கி செயல்பாடுகள் குறித்து வங்கி அலுவலா்களிடம் கேட்டறிந்துகொண்டனா்.

இதையடுத்து கொளக்காநத்தம் அஞ்சலகம் சென்ற மாணவா்கள், அஞ்சல் துறையின் செயல்பாடுகள், அஞ்சல் வில்லைகள், அஞ்சல் சேமிப்பு கணக்கு, பதிவு அஞ்சல், வெளிநாட்டு அஞ்சல் சேவை குறித்த விவரங்களை கேட்டறிந்தனா். நிகழ்ச்சியை ஆசிரியா் சாந்தகுமாா் தலைமையிலான இருபால் ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி

Okinawa

Kallaru TV
Leave a Reply

%d bloggers like this: