சமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.

சமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம்.


உபி மாநிலத்திலுள்ள சமோசா கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அந்த பகுயில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அலிகார் பகுதியில் முகேஷ் கச்சோரி என்ற கடை உள்ளது. இதில் சமோசா, கச்சோரி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைக்குத்தான் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுவையினால் பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கடையின் சமோசா பிடித்து போனது, ஆர்வத்துடன் மக்களும் இந்த  கடையில் சமோசா ஆகிய தின்பண்டங்கள் முதலியவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனால் நல்ல வருமானம் இந்தக் கடைக்கு வருகின்றது. மக்களுக்கு பிடித்து விட்டால் போதுமே நல்ல வருமானம் பார்க்க ஆரம்பித்தார் முதலாளி. தினமும் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் சேர்க்க ஆரம்பித்தார். ஆரம்பமானது அவர் கடைக்கான பிரச்சனை.
இக்கடையை முகேஷ் என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளார். இவர்தான் இந்தக் கடையின் உரிமையாளர். இவர் தினமும் வங்கியில் சேமிக்கும் பண பரிவர்த்தனையை வருமான வரித்துறையினர், கண்காணிக்க ஆரம்பித்தனர். அதோடல்லாமல் நேரடியாக கடையில் அமர்ந்தும் நோட்டம் விட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முகேஷ் நடத்தும் சமோசா கடைக்கு ஒரு வருடத்திற்கு 60 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை லாபம் இருப்பதை கண்டுபிடுத்தனர்.
முகேஷ் நடத்தும் அந்த சமோசா கடையை பதிவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முகேஷ் தனது கடையின் செலவுகள் பற்றிய முழு விபரத்தையும் வருமான வரித்துறையினரிடம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமோசா கடையில் கோடிக் கணக்கில் வருமானமா என்பதுதான் அங்குள்ள மக்களுக்கு ஆச்சரியம்.Leave a Reply

%d bloggers like this: