சிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம் சாதனையாளர்.

சிறந்த சமூக சேவகர் விருது பெறும் அன்னமங்கலம் இளம் சாதனையாளர்.


பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அச்சுதராஜகோபால், சென்னை கலாம் கோல்டன் அவார்ட்ஸ் நிறுவனம் வழங்கும் ‘சிறந்த சமூக சேவகர்’ விருதை பெறவுள்ளார்.

23 வயதாகும் இளம் சமூக சேவகரான இவர், தனது நகரில் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் மற்றும் மின்விளக்கு போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். இது மட்டுமின்றி தான் செல்லும் இடங்களில் குப்பைகளை தானே சுத்தம் செய்கிறார்.

தற்சமயம் ‘அணைக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்தில் தன்னை செயலாளராக இணைத்துக்கொண்டு அங்குள்ள வயதானவர்களை அன்பாக கவனித்து சேவை செய்கிறார். இவரது சேவையை பாராட்டி சென்னை கலாம் கோல்டன் அவார்ட்ஸ் நிறுவனத்தின் ‘கலாம் கோல்டன் விருது – 2019’ க்குரிய ‘சிறந்த சமூக சேவகர்’ எனும் விருதை அச்சுத ராஜகோபால் பெறவுள்ளார்.

இந்த இளம் சாதனையாளருக்கு எமது கல்லாறு ஊடக குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.





Leave a Reply

%d bloggers like this: