பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் சேவைகள் முடங்கியதால் பயனாளிகள் அதிர்ச்சி!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் சேவைகள் முடங்கியதால் பயனாளிகள் அதிர்ச்சி!


கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் சமூக வலைதள சேவைகள் பல்வேறு நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல நாடுகளில் வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது பயனாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த விவகாரம் பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கணினியில் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது முடங்குவதாக பல பயனாளிகள் தெரிவித்தள்ளனர்.

உலகம் முழுவதும் இந்த பாதிப்பு காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் இது வரை தெரியவில்லை. ட்விட்டரில் தற்போது #FacebookDown  என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்காகி வருவதாக கூறப்படுகிறது.

70total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: