பழம்1

சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.

1001

சப்பாத்திக் கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்கள்.

நமது பெரம்பலூர் மாவட்டங்களில் நிறைய இடங்களில் சப்பாத்திக் கள்ளி வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அதன் மேலுள்ள முள் அதனாலேயே அதன் அருகில் சென்றிருக்க மாட்டோம். இனிமே அப்படி ஒதுங்கிப் போக மாட்டீர்கள் இதப் படிச்சிட்டா தேடித் தேடி சப்பாத்தி பழத்தைச் சாப்பிடுவீர்கள். பொதுவாக இந்த சப்பாத்திக் கள்ளி வறண்ட நிலங்களில் வளரக்கூடியது.

பச்சையாக இருக்கும் சப்பாத்திக்காய் பழுக்கும் போது மாறக்கூடிய நிறம் இருக்கிறதே ”ப்பா” அவ்வளவு அழகா இருக்கும். நல்ல பழுத்த பழத்தைச் சாப்பிட்டால் வாய் முழுக்க ஒரே சிகப்புதான். அதிகமான இனிப்பு சுவை இல்லாவிட்டாலும், சாப்பிடத்தூண்டுமளவிற்குச் சுவையா இருக்கும். என்ன? வாயில் எச்சில் ஊருகிறதா. பழங்களை உண்பதால் நல்ல பயன்கள் இருக்கத்தான் செய்கிறது. அதே போல இந்தப் பழத்தில் என்ன என்ன பயன்கள் இருக்கிறதென்று பார்ப்போம்.

சப்பாத்திக் கள்ளியில் உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகள் உள்ளது. அத்துடன் உயர்தரமான நார்ச்சத்தும் நிறைந்து உள்ளது. இதில் உயிர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நமது உடலிலுள்ள இரத்த நாளங்களில் கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது. நாவறட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தைக் குறைக்கவும் இந்த சப்பாத்திக் கள்ளி பழம் உதவி புரிகிறது.

சப்பாத்திக் கள்ளி பயன்கள்.
  • சப்பாத்திக் கள்ளியின் பசையை மேல் பூச்சாகப் பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.
  • நாகதாளி பழத்தைச் சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.
  • வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி என்பார்கள் இதனைத் தீர்க்க சப்பாத்தி பழத்தைக் கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்.
  • ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது நல்ல மருந்து.
  • கண் பார்வைக்கு  இந்த சப்பாத்தி பழம் நல்ல பயன் தரும்.
  • உயர்தரமான நார்ச்சத்து இருப்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி உடல் பருமனைக் குறைக்கிறது. இந்த பழத்திலிருந்துதான் உடல் பருமனைக் குறைக்க மருந்த தயாரித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
  • சர்க்கரை நோயும் கட்டுப்படுத்தும் என்கிறது சித்த மருத்துவம்.
  • கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாக இருக்கிறது.

அப்புறமென்ன இனிமே சப்பாத்திக் கள்ளி பழத்தைப் பார்த்தால் விட்டு விடாமல் கண்டிப்பா சாப்பிடுங்கள். இன்னொன்றைச் சொல்ல மறந்து விட்டேன். குழந்தைகளிடம் இந்த பழத்தை முள்ளோடு கொடுக்காதீர்கள்.  பழத்தின் தோலில் அங்கங்கு குமிழ் குமிழா முள் இருக்கும்.  அந்த முள்ளும் சின்ன சின்னதா இருக்கும் அதைச் சுத்தமா எடுத்துவிட்டு அப்புறமா சாப்பிடுங்கள். தோலை உரித்து உள்ள இருக்கிற சோற்றைப் பார்த்தாலே சாப்பிடத் தோன்றும்.
Leave a Reply

%d bloggers like this: