அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.

அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில், அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மார்கண்டேயன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அண்ணாவின் வழியினை பின்பற்றி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா, மக்கள் ஆதரவுடன் இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக மாற்றி காட்டினார். அவர்களது வழியில் தற்போது தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. எனவே வருகிற 2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.வின் வெற்றி பயணம் தொடரும்.

இதில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சண்முகம், கோடந்தூர் கூட்டுறவு சங்க தலைவர் சேகர், மாவட்ட மகளிரணி தலைவி கலையரசிரவி, இளைஞரணியை சேர்ந்த ராஜா, வைஸ்ணவிபிரபு, தென்னிலை தெற்கு ஊராட்சி செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: