மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஈச்சங்காடு செல்லும் வழியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். மேலும் அங்கிருந்த பீரோவையும் உடைத்த அவர்கள், அதில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா? என்று தேடியுள்ளனர். நேற்று காலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் சிலர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஊர் முக்கியஸ்தர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாட்டார்மங்கலம் கிராம மக்கள் கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலில் இருந்து சுமார் ரூ.15 ஆயிரம் திருட்டு போய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
தினத்தந்தி
You must log in to post a comment.